ADDED : மார் 10, 2024 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில், நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் ஒரே நாளில், 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தாராபுரம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்மபிரபு தலைமையில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில், 36 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 100 உரிமையியல் வழக்கு, 100 சிறு குற்றவியல் வழக்குகள் உள்பட மொத்தம், 257 வழக்குகளுக்கு, ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு, 20 கோடியே, 49 லட்சத்து, 4,141 ரூபாய். மேலும், 13 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 12 வங்கி கடன் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், குற்றவியல் நடுவர் பாபு மற்றும் வழக்கறிஞர்கள், பயனாளிகள் பங்கேற்றனர்.

