/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழைநீருடன் கழிவுநீர் புகுந்து வி.ஏ.ஓ., அலுவலகம் 'நாஸ்தி'
/
மழைநீருடன் கழிவுநீர் புகுந்து வி.ஏ.ஓ., அலுவலகம் 'நாஸ்தி'
மழைநீருடன் கழிவுநீர் புகுந்து வி.ஏ.ஓ., அலுவலகம் 'நாஸ்தி'
மழைநீருடன் கழிவுநீர் புகுந்து வி.ஏ.ஓ., அலுவலகம் 'நாஸ்தி'
ADDED : ஆக 15, 2025 03:30 AM
தாரமங்கலம், தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. அதை சுற்றியுள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வி.ஏ.ஓ., அலுவலக பின்புற சாக்கடையில் செல்கிறது. சாக்கடையில் அடைப்பால், கழிவுநீர், அலுவலக வளாகத்தில் சில நாட்களாக தேங்கி துார்நாற்றம் வீசியதோடு, கொசுக்களால் நோய் தொற்று அபாயம் நிலவியது.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று மதியம், 2:10 மணிக்கு மழை பெய்யத்தொடங்கி, அரை மணி நேரம் கொட்டியது. இதனால், வி.ஏ.ஓ., அலுவலக பின்புறம் சாக்கடையில் மழைநீர் செல்ல வழியின்றி, அதனுடன் கழிவுநீர் சேர்ந்து, அலுவலகம் உள்ளே புகுந்தது. வி.ஏ.ஓ., வரதராஜன், உதவியாளர்கள், அங்கிருந்த மனுக்கள், முக்கிய ஆவணங்களை, உயரமான மேஜை மீது அடுக்கி வைத்தனர். பீரோவின் கீழ் அறையில் இருந்த ஆவணங்களையும் மேலே எடுத்து வைத்து, அலுவலத்தை பூட்டிவிட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து வந்த கழிவுநீரால், அலுவலகம் முழுதும் நிறைந்து காணப்பட்டது.
இதுகுறித்து வரதராஜன் கூறுகையில், ''அலுவலக பின்புறம் உள்ள சாக்கடை பட்டா நிலத்தில் உள்ளதால், அவர்கள் தேவைக்கேற்ப அடைக்கும்போது, இதுபோன்று மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் அலுவலகத்தில் சூழ்ந்துகொள்கிறது. இதற்கு நகராட்சி சார்பில் சாக்கடை அமைத்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்,'' என்றார்.