/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்கால் நீரில் சங்கமிக்கும் சாக்கடை நீர்
/
வாய்க்கால் நீரில் சங்கமிக்கும் சாக்கடை நீர்
ADDED : மே 02, 2025 02:00 AM
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை ஒட்டி சாக்கடை செல்கிறது. இங்குள்ள ஒரு இடத்தில் சாக்கடை நீர், வாய்க்காலில் சங்கமிக்கிறது. இதனால் வாய்க்கால் நீர் மாசு அடைந்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நீண்ட நாட்களாக சாக்கடை நீர், வாய்க்காலில் கலந்து வருகிறது. இதுபற்றி அலுவலர்களுக்கு தெரியும். ஆனால் நடவடிக்கை இல்லை. காலிங்கராயன் வாய்க்கால் நீரை தான் பல கிராமங்களில் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகள், பயிர்களுக்கும் தண்ணீர் விடப்படுகிறது.
இந்நிலையில் தான் சாக்கடை நீரை வாய்க்காலில் கலக்க செய்துள்ளனர். இந்நீரை பயன்படுத்துவோருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்நடைகள் மட்டுமின்றி பயிர்களும் பாதிக்கப்படும் என்ற நிலை தொடர்கிறது. அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

