/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி பகுதியில் சாக்கடை, வடிகால் சுத்திகரிப்பு பணி தீவிரம்
/
கொடுமுடி பகுதியில் சாக்கடை, வடிகால் சுத்திகரிப்பு பணி தீவிரம்
கொடுமுடி பகுதியில் சாக்கடை, வடிகால் சுத்திகரிப்பு பணி தீவிரம்
கொடுமுடி பகுதியில் சாக்கடை, வடிகால் சுத்திகரிப்பு பணி தீவிரம்
ADDED : டிச 12, 2024 01:54 AM
கொடுமுடி, டிச.12-
கொடுமுடி பேரூராட்சி சார்பில், சாக்கடை, மழை நீர் வடிகால் சுத்திகரிப்பு பணி நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடுமுடியில் சாலை ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறையினரால், சில தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. பொக்லை் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது, சிதறிய கட்டுமான கழிவுகள் சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்களில் விழுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்வாடை வீசியது.
இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. மணிக்கூண்டு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில், சாக்கடையில் விழுந்து அடைத்திருந்த கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர்.