/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவருடன் துாங்கிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் ஓட்டம்
/
கணவருடன் துாங்கிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் ஓட்டம்
கணவருடன் துாங்கிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் ஓட்டம்
கணவருடன் துாங்கிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்; வாலிபர் ஓட்டம்
ADDED : செப் 06, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி :உ.பி. மாநிலத்தை சேர்ந்த, 29 வயது பெண், கணவர் மற்றும் இரு மகன்களுடன், சித்தோடு ஆவின் பால்பண்ணை அருகே வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ், 35, வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை பார்த்த கணவர் தடுத்தபோது, தம்பதியை தினேஷ் தாக்கியுள்ளார். இதனால் இருவரும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் வந்து தினேஷை விரட்டி விட்டனர். புகாரின்படி சித்தோடு போலீசார் தினேஷை தேடி வருகின்றனர்.