/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சக்தி மசாலா நிறுவனத்துக்கு ெஹலன்கெல்லர் விருது
/
சக்தி மசாலா நிறுவனத்துக்கு ெஹலன்கெல்லர் விருது
ADDED : டிச 05, 2024 07:37 AM
ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரணமான மாதிரி நிறுவனம்
என்ற தகுதியின் கீழ், 2024-ம் ஆண்டுக்கான ஹெலன்கெல்லர் விருது, ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்திற்கு
கிடைத்தது.விருது வழங்கும் விழா புதுடில்லி அரசியலமைப்பு சட்ட அரங்கில் நடந்தது. விழாவில் மத்திய சமூக நீதி மற்றும்
அதி-காரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிக்கான அதி-காரம் அளித்தல் துறையின் செயலாளர்
டாக்டர்.ராஜேஷ் அகர்வால், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான
தேசிய மையத்தின் தலைவர் பிரதீப் குப்தா ஆகியோர் இணைந்து விருதினை வழங்கினர். சக்தி மசாலா
நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் துரைசாமி பெற்றுக் கொண்டார். இன்டர்நேஷனல் ஹப்ஸ்
நிறுவனத்தின் கலாசாரா முன்னோடி துறையின் இயக்குனர் ஷீதல் பாதிஜா உட-னிருந்தார். விருது பெற்ற, சக்தி
மசாலா குழுமத்தின் நிறுவனர் துரைசாமிக்கு, இந்திய புலனாய்வு துறையின் முன்னாள் இயக்-குனர்
கார்த்திகேயன், டில்லி கம்பன் கழக நிறுவனர் - தலைவர் பெருமாள், செயலாளர் முத்துவேல் ஆகியோர் சால்வை
அணி-வித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.