/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழுத்து வீங்கி இறக்கும் ஆடுகள்; அந்தியூர் அருகே விவசாயிகள் பீதி
/
கழுத்து வீங்கி இறக்கும் ஆடுகள்; அந்தியூர் அருகே விவசாயிகள் பீதி
கழுத்து வீங்கி இறக்கும் ஆடுகள்; அந்தியூர் அருகே விவசாயிகள் பீதி
கழுத்து வீங்கி இறக்கும் ஆடுகள்; அந்தியூர் அருகே விவசாயிகள் பீதி
ADDED : டிச 23, 2024 09:27 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுார், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரசுதன், 46; குடும்பத்தினருடன் குடியிருந்து கொண்டு, விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஒரு வாரமாக பர்கூர் மலைப்பகுதியை ஒட்டிய பகுதியில், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு, நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹரிஹரசுதனுக்கு சொந்தமான இரு ஆடுகள், கழுத்து பகுதியில் நேற்று வீக்கம் ஏற்பட்டு திடீரென இறந்தன. மேலும் மூன்று ஆடுகள் உடல் சோர்வுடன் காணப்பட்டன. அவர் தகவலின்படி சென்ற கால்நடைதுறையினர், உயிரிழந்த ஆடுகளின் குடல், இரைப்பையை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மூன்று தினங்களுக்கு முன் இதே பகுதியில் அழகேசன் என்பவருக்கு சொந்தமான, மூன்று ஆடுகள் கழுத்துப் பகுதியில் வீங்கி இறந்துள்ளன. இதனால் ஆடு வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர். கால்நடைத்துறையினர் நோயை கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை அளித்தால் மட்டுமே, மற்ற ஆடுகளை காப்பற்ற முடியும் என்று, இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.