ADDED : ஜூன் 10, 2026 03:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
காசிபாளையம் கே.கே.நகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மாணிக்கம் மனைவி
ரத்தினம், 55; ஆடுகள் வளர்த்து வருகிறார். ஏழு ஆடுகளை
மேய்த்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை, சுப்பிரமணியம் நகரில்
சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி
வேன், குழந்தைகளை இறக்கி விட்டு சென்றபோது, சாலையில் சென்ற ஆடுகள் மீது
மோதினார். இதில் மூன்று ஆடுகள் பலியாகின. இரு ஆடுகளுக்கு கால்
முறிந்தது. வேன் டிரைவரான வெள்ளோடு ராசாம்பாளையம் ஜெகநாதன், 60,
மீது, ஈரோடு தாலுகா போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
