/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பினாயில், ஆசிட், கழிவறை சுத்தம் செய்யும் ஆயாவுக்கு சம்பளம் அரசு நிதியுதவி பள்ளியில் ரூ.1,000 கேட்டதால் அதிர்ச்சி

ADDED : ஜூலை 22, 2025 01:36 AM
ஈரோடு, அரசு நிதியுதவி பள்ளியில் மாணவர்களிடம், 1,000 ரூபாய் கேட்டதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாநகரில் அரசு நிதியுதவி பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் ஒரு பள்ளியில், சில தினங்களுக்கு முன், மாணவ-மாணவிகளிடம், ௧,௦௦௦ ரூபாய் வாங்கி வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சில பெற்றோர் பள்ளியில் சென்று கேட்டபோது ஸ்கூல் பேக், ஷூ, பினாயில், ஆசிட், கழிவறை சுத்தம் செய்யும் ஆயாவுக்கு சம்பளம் வழங்கவே, பணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:ஸ்கூல் பேக், ஷூவை அரசே இலவசமாக வழங்குகிறது. ஜூனில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போதே கட்டணங்களை செலுத்தி விட்டோம். ஆனால் பினாயில், ஆசிட், ஆயாவுக்கு சம்பளம் எனக்கூறி, 1,000 ரூபாய் கேட்கின்றனர்.இதில் ஷூவும் சரியான அளவில் வழங்கப்படவில்லை. பள்ளி கல்வி துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கேட்டபோது, பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:
பணம் வசூலிப்பது குறித்து ஆதாரத்துடன் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்கூல் பேக், ஷூ, பினாயில், ஆசிட், ஆயா சம்பளத்துக்காக பணம் வசூலிக்க கூடாது. ஷூ அளவு பெரியதாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தால், ஆசிரியர்களே மாற்றி கொடுத்து விடுவார்கள்.
இவ்வாறு கூறினர்.