/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோர மர கிளைகளை வெட்டி வீழ்த்தியதால் அதிர்ச்சி
/
சாலையோர மர கிளைகளை வெட்டி வீழ்த்தியதால் அதிர்ச்சி
ADDED : செப் 22, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதியூர்: காங்கேயம் அருகே ஊதியூர்-கம்பளியம்பட்டி பிரதான சாலையில், வானவராயநல்லுார் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம், 25 வயதான கொன்றை மரம் இருந்தது.
பரந்து விரிந்த கிளைகளால் மக்களுக்கு நிழல் கிடைத்தது. இந்நிலையில் மரத்தின் அடிப்பாகத்தை மட்டும் விட்டுவிட்டு அனைத்து கிளைகளையும் வெட்டி வீழ்த்தி விட்டனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மரம் துளிர்விடுவது சந்தேகம். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, மரத்தை மொட்டையடித்த ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.