/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி
/
அமராவதி ஆற்றில் மூழ்கி 'ஷொமேட்டோ' ஊழியர் பலி
ADDED : அக் 18, 2024 03:02 AM
அமராவதி ஆற்றில் மூழ்கி
'ஷொமேட்டோ' ஊழியர் பலி
தாராபுரம், அக். 18-
தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் நந்தகுமார், 27; தனியார் உணவு விற்பனை நிறுவனமான ஷொமேட்டோ நிறுவன ஊழியர். நண்பர்களன நிசார் அலி, 26; ஷாருக்கான், 25, ஆகியாருடன், தாராபுரம் புதிய அமராவதி ஆற்று பாலம் அருகே நேற்று மதியம் குளிக்க சென்றார்.
அப்போது ஆற்றில் மூழ்கி தத்தளித்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் பலனில்லாததால், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி, நந்தகுமார் உடலை மீட்டனர். நந்தகுமார் மது குடித்திருந்ததாக தெரிகிறது. இப்பகுதியில் குளித்த பலர் இறந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையை மீறி சென்று குளித்ததால், நந்தகுமார் பலியாகி விட்டதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.