ADDED : ஜூலை 10, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கமத்தை
அடுத்த மலையடிபுதுாரை சேர்ந்தவர் மகேஷ்பாபு, 37; அத்தாணி சாலையில்
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் நேற்று காலை கடை
திறக்க வந்தார். கடை ஷட்டர் ஒருபக்கமாக உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 10 கிராம் வெள்ளி, கல்லா பெட்டியில் இருந்த,
12,000 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரிந்தது. அவர் புகாரின்படி
சத்தியமங்கலம் போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி
வருகின்றனர்.
