/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாடகைக்கு 18 சதவீத வரியை கண்டித்து கடையடைப்பு மாவட்டத்தில் ரூ.௧௦௦ கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
/
வாடகைக்கு 18 சதவீத வரியை கண்டித்து கடையடைப்பு மாவட்டத்தில் ரூ.௧௦௦ கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
வாடகைக்கு 18 சதவீத வரியை கண்டித்து கடையடைப்பு மாவட்டத்தில் ரூ.௧௦௦ கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
வாடகைக்கு 18 சதவீத வரியை கண்டித்து கடையடைப்பு மாவட்டத்தில் ரூ.௧௦௦ கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
ADDED : நவ 30, 2024 01:18 AM
ஈரோடு, நவ. 30-
வாடகை கடை, கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெறக்கோரி, ஈரோட்டில் நேற்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு நடத்தினர்.
இதன்படி ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை, பொன் வீதி, அக்ரஹாரம் வீதி, கொங்காலம் மன் கோவில் பகுதி, காசியண்ணன் வீதி போன்ற இடங்களில் ஜவுளி சார்ந்த கடைகள், ஆட்டோமொபைல், அரிசி ஆலை கள், நகை கடைகள் என முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டன. கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் மதியத்துக்கு மேல் கடைகளை அடைத்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உட்பட பல அமைப்புகள், கடையடைப்பில் பங்கேற்காததால், மளிகை, டீக்கடை, பேக்கரி, ேஹாட்டல்கள் திறந்திருந்தன.
கடையடைப்பு குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:
இந்த கடையடைப்பு மூலம், கடை உள்ளிட்ட வணிக கட்டடங்களுக்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளோம். தவிர தமிழக அரசின் சொத்து வரி மற்றும் மின் கட்டணம் ஆகியவை ஓராண்டுக்கு ஒரு முறை, 6 சதவீத உயர்வு என்பதையும் திரும்ப பெற வலியுறுத்தி உள்ளோம். மாவட்ட அளவில், 20,000 கடைகள், உற்பத்தி நிறுவனங்கள், குடோன்கள் என வணிக நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதித்தது. இவ்வாறு கூறினார். இதேபோல் மாவட்டத்திலும் பரவலாக கடையடைப்பு நடந்தது.
* சத்தியமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட், வடக்குபேட்டை, மணிக்கூண்டு, அத்தாணி ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. மாலை, 6:௦௦ மணிக்கு பிறகே கடைகள் திறக்கப்பட்டன.
* கொடுமுடி, சாலைப்புதுார், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், ஊஞ்சலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்பட, 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.
* பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வாடகை கட்டடங்களில் செயல்படும் மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், நகை கடைகள், பேன்சி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன.