/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டிப்பு வரிகளை குறைக்க கோரி கோபியில் கடையடைப்பு
/
மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டிப்பு வரிகளை குறைக்க கோரி கோபியில் கடையடைப்பு
மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டிப்பு வரிகளை குறைக்க கோரி கோபியில் கடையடைப்பு
மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டிப்பு வரிகளை குறைக்க கோரி கோபியில் கடையடைப்பு
ADDED : ஜன 04, 2025 01:35 AM
கோபி, ஜன. 4-
மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தாங்கள் உயர்த்திய வரிகளை குறைக்க வேண்டும். நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் பெயரில், ஆண்டுதோறும் வணிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை, குறைந்தபட்ச தொகையாக விதிக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., வரி, 18 சதவீதம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒரு முறை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், கோபியில் நேற்று கடையடைப்பு நடந்தது.
இதனால் கோபி - கரட்டூர், புதுப்பாளையம், பாரியூர் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மொடச்சூர் சாலை, கச்சேரிமேடு, அரசு மருத்துவமனை சாலை, மார்க்கெட் சாலை, அனுமந்தராயன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் பஸ் ஸ்டாண்டில் உள் மற்றும் வெளிப்பகுதியில் நகராட்சி வணிக வளாக கடைகளும் மூடப்பட்டன.
முக்கிய சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால், பிரதான சாலை மற்றும் முக்கிய சந்திப்புகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. கோபி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி சப் - கலெக்டர் சிவானந்தத்திடம் மனு வழங்கினர். இதுகுறித்து கோபி அனைத்து வணிகர் சங்க தலைவர் வேலுமணி கூறுகையில், 'எங்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டத்தில், 3,000 கடைகள் ஈடுபட்டதால், 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதித்தது' என்றார்.

