/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறுமைய விளையாட்டு; விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்
/
குறுமைய விளையாட்டு; விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்
ADDED : அக் 17, 2024 01:40 AM
குறுமைய விளையாட்டு; விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்
பெருந்துறை, அக். 17-
பெருந்துறை குறுமைய அளவிலான விளையட்டுப் போட்டிகளில், பெருந்துறை சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகள், இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவு கைப்பந்து போட்டியில் முதலிடம், மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். மாணவர்கள் மூத்தோர் பிரிவில் முதலிடம், மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம், எறிபந்து போட்டியில் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். இவர்கள் ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். கோவை மண்டல கைப்பந்து தேர்வு போட்டியில், இப்பள்ளியின், 10ம் வகுப்பு மாணவன் தர்ஷன், மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகருக்கு, பள்ளி தலைவர் சின்னசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் மாணிக்கமூர்த்தி, முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.