/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவர் தினம் கொண்டாட்டம்
/
நந்தா சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவர் தினம் கொண்டாட்டம்
நந்தா சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவர் தினம் கொண்டாட்டம்
நந்தா சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவர் தினம் கொண்டாட்டம்
ADDED : ஜன 06, 2024 07:28 AM
ஈரோடு: ஈரோடு நந்தா சித்த மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், பெங்களூரில் செயல்பட்டு வரும் சித்தா மத்திய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பண்டைய ஞானம் மற்றும் நவீன தீர்வுகள் என்னும் தலைப்பில் ஏழாவது சித்த மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆரோக்கியா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாக இயக்குனரும், திட்டக்குழு உறுப்பினருமான டாக்டர் கு.சிவராமன் பங்கேற்றார்.தேசிய சித்த மருத்துவ நிறுவன பொது இயக்குனர் மீனாகுமாரி காணெலி காட்சி மூலமாகவும், சிவா ஆயுஸ் பார்மா சர்வீஸ் தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், சாஸ்தா பல்கலை பேராசிரியர்களான நாகராஜ், சவரிராஜ் சகாயம், தியாகராஜன், மாவட்ட சித்த மருத்துவ துறை அலுவலர் விஜயராகவன் மற்றும் சித்தா மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி கண்ணன் ஆகியோர், தங்கள் அனுபவம், கருத்துக்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.