/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிப்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளும் பணி துவக்கம்
/
குண்டேரிப்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளும் பணி துவக்கம்
குண்டேரிப்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளும் பணி துவக்கம்
குண்டேரிப்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ளும் பணி துவக்கம்
ADDED : ஆக 23, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி என் பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணையை துார் வாரும் வகையில், விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதில் முதல் கட்டமாக, 19 பேருக்கு அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்ட நிலையில், வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே மண் அள்ள முடியும். எட்டு விவசாயிகள் டிராக்டரில் (1 லோடு) ஒரு யூனிட் வீதம், 23 யூனிட் வண்டல் மண்ணை அள்ளி சென்றனர்.