/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில் வெள்ளி விழா
/
ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில் வெள்ளி விழா
ADDED : ஏப் 21, 2025 07:30 AM
பெருந்துறை : பெருந்துறை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி வெள்ளி விழா, பட்டமளிப்பு விழா, மலர் வெளியீட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளித்தலைவர் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி கல்வி இயக்குனரும், முதல்வருமான உமையவள்ளி இளங்கோ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை அப்பல்லோ மருத்துவமனை மனநல மருத்துவர் தீப், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன்னாள் மருத்துவர் ராம்பிரசாத் மற்றும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி கர்னல் ராமகிருஷ்ணன் பங்கேற்று, விழா மலரை வெளியிட்டு, பிளஸ் ௨ மாணவ,- மாணவியருக்கு பட்டம் மற்றும் சான்றிதழோடு நினைவுப் பரிசும் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
1999 முதல் 2025ம் கல்வியாண்டு வரை பள்ளி மற்றும் மாணவர்களின் சாதனை, பள்ளியில் நடைபெற்ற சில இனிமையான தருணங்கள், காணொலி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆத்விகா சுரேஷ் நன்றி கூறினார்.