ADDED : அக் 26, 2024 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே பசுவபட்டி பிரிவு, தட்-டாங்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி, 56; சிப்காட் தொழிலாளி. நேற்று காலை வேலைக்கு மொபட்டில் புறப்பட்டார்.
அப்போது அக்கா கண்-ணம்மாளை, 65, ஏற்றி சென்றார். கணுவாய் என்ற இடத்தில் மொபட் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. துாக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவம-னையில் இருவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்-டனர். பழனிச்சாமி புகாரின்படி சென்னிமலை போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை, தேடி வருகின்றனர்.