sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் குருநாத சுவாமி கோவிலின் தல வரலாறு

/

அந்தியூர் குருநாத சுவாமி கோவிலின் தல வரலாறு

அந்தியூர் குருநாத சுவாமி கோவிலின் தல வரலாறு

அந்தியூர் குருநாத சுவாமி கோவிலின் தல வரலாறு


ADDED : ஆக 10, 2024 07:39 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அந்தியூரிலிருந்து, இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் புதுப்பா-ளையத்தில் குருநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பரம்-பரை பூசாரிகளின் மூதாதையர்கள், சிதம்பரம் அருகிலுள்ள பிச்சா-புரத்தை சேர்ந்தவர்கள் என்றும், குட்டியாண்டவர் கோவிலில் பூஜை செய்து வந்தனர் என்றும் தல வரலாறு கூறுகிறது.

ஆற்காடு நவாப், பூசாரி வீட்டு பெண்ணை விருப்பம் தெரி-வித்து, உறவினர்கள் மறுத்ததால், பூசாரி குடும்பத்தினரை கொல்-லப்படுவதாக மிரட்டப்பட்டனர். அப்போது, அங்கிருந்து தப்பி வந்த பூசாரியின் உறவினர்கள் கூடையில் கொண்டு வந்த மூன்று கற்களை, பல ஊர்கள் கடந்து வந்து பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்கினர். அப்போது, பஞ்சம் பிழைக்க செல்ல அனைவரும் முடி-வெடுத்து, கற்கள் மூன்றையும் ஆற்றில் வீசினர்.

அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, ஆற்றில் வீசிய கற்கள் மூன்றும், சாந்தப்பன் (தற்போதைய அறங்காவலர் பரம்ப-ரையை சேர்ந்தவர்கள்) என்பவரது கூடையில் இருந்ததை கண்டு பரவசமடைந்தனர். இக்கற்களை குலதெய்வமாக வழிபட வேண்டும் என உள்ளத்தில் உறுதி மேற்கொண்டு, அந்தியூர் புதுப்-பாளையத்துக்கு வந்தனர்.

புதுப்பாளையத்தில் இருந்த பாண்டிய மன்னனிடம், தங்குவ-தற்கு அனுமதி கேட்டு கல் மண்டபத்தில் தங்கினர். மூன்று கற்க-ளையும் வைத்து அன்றாடம் பூஜை செய்து வந்தனர். காலம் செல்ல செல்ல கற்சிலைக்கும் உருவம் அமைத்து வழிபட துவங்-கினர்.

முதல் கல்லை குலதெய்வமாக்கி, தாய் வடிவம் தந்து, அதற்கு காமாட்சி அம்மன் என்றும், இரண்டாவது கல்லை பெருமாள் சுவாமி என்றும், மூன்றாவது சிலைக்கு, சிவனையும், முருக-னையும் ஒன்றாக்கி, குருநாத சுவாமி என பெயரிட்டனர். குரு என்றால் ஈஸ்வரன், நாதன் என்றால் முருகன், எனவே குருநாதன் என பெயரிட்டு வழங்கினர்.






      Dinamalar
      Follow us