/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முகநுாலில் ஆபாச படம் அனுப்பி தொந்தரவு: சிவகிரி வாலிபர் கைது
/
முகநுாலில் ஆபாச படம் அனுப்பி தொந்தரவு: சிவகிரி வாலிபர் கைது
முகநுாலில் ஆபாச படம் அனுப்பி தொந்தரவு: சிவகிரி வாலிபர் கைது
முகநுாலில் ஆபாச படம் அனுப்பி தொந்தரவு: சிவகிரி வாலிபர் கைது
ADDED : ஜூலை 16, 2025 01:22 AM
ஈரோடு, சிவகிரியை சேர்ந்த தம்பதியின் முகநுால் பக்கத்தில், கடந்த சில நாட்களாக ஆபாச மெசேஜ், வீடியோ, போட்டோ தொடர்ந்து வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 'கவின்-கதிர்' மீது நடவடிக்கை கோரி, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி வழக்கு பதிந்து, ஆபாச வீடியோ அனுப்பிய நபரின் ஐ.டி., மொபைல் போன் ஐ.பி., முகவரியை கொண்டு ஆய்வு செய்தனர். இதில் சிவகிரி, கந்தசாமிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 24, என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசார் நேற்று அவரை பிடித்து விசாரித்தனர். சோலார் பிளாண்ட் போடும் நிறுவன தொழிலாளியான நந்தகுமார், புகார்தாரரின் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். அப்போது அவர்களது சமூக வலைதள முகவரியை அறிந்து, ஆபாச வீடியோ, போட்டோக்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டார். நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.