ADDED : அக் 02, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில் நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் நற்பணி மன்ற தலைவர் தங்கவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், ஆயுத பூஜை நடந்தது. மாவட்ட பொது செயலர்கள் கனகராஜன், வின்சென்ட், எம்.ராஜேந்திரன், அர்சத், பாஷா, கிருஷ்ணவேணி, பிரசன்னா, சிவா உட்பட
பலர் பங்கேற்றனர்.