ADDED : அக் 12, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவலிங்கம் தயாரிப்பு தீவிரம்
கோபி, அக். 12-
கோபி அருகே சாணார்பதியில், கல்ஹாரம் முதல் விமான கோபுரம் வரை, ஆகம சிற்ப சாஸ்த்திர முறைப்படி, கைவண்ணத்தில் சுவாமி சிலைகள் வடிவமைக்கின்றனர்.
இந்நிலையில் காகித கலவை மற்றும் சில பொருட்களை கொண்ட கலவை மூலம், அச்சு மூலம் தத்ரூபமாக சிவலிங்கம் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரன் கூறுகையில்,'சிவராத்திரியை முன்னிட்டு, கோவை, ஈரோடு உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் அவரவர் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய, சிவலிங்கம் சிலைகள் தயாரிக்க ஆர்டர் வந்துள்ளது.
இதுவரை, 600 சிலைகள் தயாரித்துள்ளோம். தற்போது அச்சு மூலம், அரை அடி சிலை செய்கிறோம். இதன் பிறகு வர்ணம் பூசி வடிவமைப்போம்' என்றார்.

