/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம்
ADDED : ஜன 05, 2025 02:04 AM
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம்
பவானி, : பவானி அருகேயுள்ள மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியாகியுள்ளது. இதனால் நுாறு நாள் வேலை திட்டத்தில் இனி வேலை கிடைக்காது என்று, 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று தாங்கள் வேலை செய்து கொண்டிருந்த காலிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில், கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். பஞ்., நிர்வாகம் மூலம், கலெக்டர் அலுவலகத்தில், நாளை மனு அளிக்கப்
படவுள்ளது. இதில்லாமல் கவுந்தப்பாடி, மேட்டுநாசுவம்பாளையம், படவல்கால்வாய், குருப்பநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பத்து பஞ்சாயத்தை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோபி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

