/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு; போலீசில் புகார்
/
சிவன்மலையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு; போலீசில் புகார்
சிவன்மலையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு; போலீசில் புகார்
சிவன்மலையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு; போலீசில் புகார்
ADDED : ஜன 13, 2024 03:48 AM
காங்கேயம்: சிவன்மலை ரவுண்டானா பகுதியில், மரங்களை வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, காங்கேயம் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஜவஹர் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காங்கேயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி, சிவன்மலை ரவுண்டானா அருகில், ஊராட்சி அங்கீகாரம் பெற்று, அசுத்தமாக இருந்த இடத்தை, 15 ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்து, அந்த இடத்தில் மரங்கள், அழகிய செடிகள் வைத்து சிறு பூங்கா உருவாக்கப்பட்டது.
கார், ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் இதை பராமரித்து வந்தனர்.சிவன்மலை தேர்திருவிழாவின்போது கடைகள் ஏலம் விடப்படும். அப்போது பூங்காவுக்கு இடையூறின்றி அமைத்துக் கொள்ள நிபந்தனை விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத ஆசாமிகள், பூங்காவில் உள்ள மரங்கள், அழகிய செடிகளை வெட்டி சாய்த்துள்ளனர். அரசம்பாளையம் மின்வாரியத்தை சேர்ந்த போர்மேன் தனபால், ஊழியர்கள் வெட்டியதாக, மக்கள் தெரிவிக்கின்றனர். மரத்தை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். போலீசில் மனு கொடுக்க, ஜவஹருடன் சிவன்மலை ஊர்மக்களும் சென்றனர்.