தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மந்தமான ஸ்கேன் இயந்திரங்கள்: டாஸ்மாக் கடைகளில் 'மல்லுக்கட்டு'

மந்தமான ஸ்கேன் இயந்திரங்கள்: டாஸ்மாக் கடைகளில் 'மல்லுக்கட்டு'

மந்தமான ஸ்கேன் இயந்திரங்கள்: டாஸ்மாக் கடைகளில் 'மல்லுக்கட்டு'


UPDATED : நவ 11, 2026 10:13 PM

ADDED : நவ 11, 2026 07:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 10:13 PM ADDED : நவ 11, 2026 07:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யும் பாட்டில்களை ஸ்கேன் செய்யவும், திரும்ப வழங்கப்படும் காலி பாட்டில்களை ஸ்கேன் செய்து, 10 ரூபாயை திரும்ப வழங்கும் முறைக்காகவும் நவ.,1ம் தேதி முதல் இரு ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகளில் இயந்திரங்கள், நெட் கனெக்ஷனுடன் ஒத்துப்போகாமல் மெதுவாக இயங்குவதால், ஒரு வாடிக்கையாளருக்கு மது வழங்கி முடிக்க, 3 முதல் 4 நிமிடங்களுக்கு மேலாகிறது. 10 வாடிக்கையாளர்களை ஸ்கேனில் செய்தால், 3 முதல் 4 பேருக்கு முறையாக ஸ்கேன் ஆவதில்லை. பணம் அனுப்பும்போது டிஸ்பிளேயில் வரவான விபரம் பதிவாவதில்லை. இந்த புகார்களால் ஈரோட்டில் பல டாஸ்மாக் கடைகளில், விற்பனையை அவ்வப்போது நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஊழியர்கள் விரக்தி அடையும் நிலையில், வாடிக்கையாளர்கள் கோபத்துக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கூறியதாவது:

இயந்திரம், 30 முதல் 40 சதவீதம் வரை முறையாக ஸ்கேன் ஆவதில்லை. யூ.பி.ஐ.டி., மூலம் பணம் சரியாக வருவதில்லை. பாட்டிலை ஸ்கேன் செய்து வழங்க அதிகபட்சம், 5 நிமிடம் வரை ஆவதால், அடுத்தடுத்து நிற்கும் வாடிக்கையாளர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

இதனால் இயந்திர பயன்பாட்டை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது. நெட் வசதி முறையாக இணையாததால் விற்பனையை நிறுத்துகிறோம்.

அதேபோல காலி மதுபாட்டிலை ஸ்கேன் செய்யும் இயந்திரமும் வேகமாக வேலை செய்வதில்லை. காலி பாட்டிலில் ஸ்கேன் செய்ய வேண்டிய ஸ்டிக்கர் கசங்கி, கிழிந்து, அழுக்கடைந்திருந்தால் ஸ்கேன் ஆவதில்லை.

இதனால் வாடிக்கையாளருடன் தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை டாஸ்மாக் நிர்வாகம் முறையாக சரி செய்யவும், விரைவாக செயல்படும் ஸ்கேனிங் கருவி, நெட் வசதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us