ADDED : பிப் 24, 2026 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே முனியப்பம்பாளையத்தில், மாவட்ட அளவிலான சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கலெக்டர் கந்தசாமி சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டு, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், 10 பயனாளிகளுக்கு, 21.94 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், அந்தியூர் வேளாண் பொறியாளர் முரளி மற்றும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

