ADDED : செப் 27, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி., சாலை
மாநகராட்சி நடுநிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி.,)
மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நடந்தது.
அரசு மகளிர் மாதிரி
மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிபிரியா, வி.ஏ.ஓ.,
சிரஞ்சீவி முன்னிலை வகித்தனர். ஓட்டெடுப்பு மூலம் தேர்தல் நடந்தது.
தலைவராக சத்யா, துணை தலைவராக அருணா உள்பட, 24 பேர் தேர்வு
செய்யப்பட்டனர். அனைவருக்கும் உறுப்பினர் சான்றிதழ்
வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார். ஆசிரியர்
பிரதிநிதி பிரின்சஸ் நன்றி கூறினார்.
