ADDED : செப் 27, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பெருந்துறை
சிப்காட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், இ.எஸ்.ஐ.சி.,
சார்பில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குறைதீர் கூட்டம் நாளை
நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க
விரும்பும் உறுப்பினர், தொழிலதிபர்கள், இ.பி.எப்., ஓய்வூதியர்,
தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்கள் விபரங்கள், ஆவணங்களை வழங்கி பயன்
பெறலாம்.
