ADDED : செப் 27, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் நடக்கவுள்ளது.
இதுபற்றி கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஆடுகள் வளர்ப்பில் ஆட்டு கொல்லி நோய் விவசாயி
களுக்கு
பெரும் சவாலாகும். இந்நோயால் ஆடுகள் இறப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி, ஆண்டுக்கு ஒரு முறை
இலவசமாக அனைத்து வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கு
போடப்படுகிறது. இதன்படி நாளை முதல் (28ம் தேதி) 30 நாட்களுக்கு
மாவட்ட அளவில் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சினை
ஆடுகளை தவிர நான்கு மாதமான ஆடுகள் உள்பட அனைத்து ஆடுகளுக்கும்
தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
