பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை
பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை
ADDED : நவ 23, 2026 06:28 AM

அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு
மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
குறிப்பாக மல்லி, முல்லை
மற்றும் சம்பங்கி பூ அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது
இரவு மற்றும் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால்,
மல்லிகை பூ விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால்
உற்பத்தி வெகுவாக குறைந்து, விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ,
ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்ற மல்லிகை, 2,000 ரூபாய்க்கு நேற்று
விற்றது. முல்லை கிலோ, 1,020 ரூபாய், சம்பங்கி, 160 ரூபாய்,
கனகாம்பரம், 2,100 ரூபாயாக உயர்ந்து விற்பனையானது.
