/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் கோவிலில் இதுவரை 68 ஜோடிகளுக்கு திருமணம்
/
பாரியூர் கோவிலில் இதுவரை 68 ஜோடிகளுக்கு திருமணம்
ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பாரியூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவில், மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். கோவிலில் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, மாசி மாத முகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையில் திருமணம் நடக்கும். கடந்த, 2016ல், 56 ஜோடிகள், 2017ல், 172; 2018ல், 162; 2019ல், 171த 2020ல், 122; 2021ல், 94; 2022ல், 105; 2023ல், 120 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில் இருந்து நேற்று வரை, 68 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமண உதவித்தொகை திட்டம் இல்லாததால், கோவிலில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.