ADDED : நவ 04, 2026 07:38 AM
சென்னிமலை:சென்னிமலையை
சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன். சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் மீது, மதுரை மாவட்ட
சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவில் கடந்த, 2017-ல் ஜல்லிக்கட்டு
எதிர்ப்பு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை, மதுரை
ஐந்தா-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து
வருகிறது.
வழக்கில் மூன்றாவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள
முகிலனுக்கு, கடந்த மார்ச், 24ம் தேதி நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு சென்னிமலைக்கு வந்த
மதுரை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் முகிலனை கைது செய்தனர்.
மதுரைக்கு அழைத்து சென்ற நிலையில், மதுரை நீதிமன்றத்தில் நேற்று
ஆஜர்படுத்தினர். இதில் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி
உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
