ADDED : மே 18, 2024 01:09 AM
பேத்தியிடம் அத்துமீறிய
தாத்தா போக்சோவில் கைது
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பழநி ரோட்டை சேர்ந்தவர் முருகேசன், 61; இவர் பேத்தி உறவுமுறை கொண்ட, ௧௨ வயது சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி அத்துமீற முயன்றதாக, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆம்னி வேனில் குட்காகடத்தி வந்தவர் கைது
சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார் குன்றி பிரிவு பகுதியில், நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு ஆம்னி காரில் சோதனை செய்தனர். கோபி அருகேயுள்ள புதுக்காட்டை சேர்ந்த மாரிமுத்து, 48, வந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனை செய்வதற்காக, குட்கா புகையிலை பொருட்களை வாங்கி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆம்னி காருடன், 16 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருள் விற்ற
5 மளிகை கடைகளுக்கு 'சீல்'
கோபி, மே 18-
கோபி அருகே உக்கரம், அரசூர், மாக்கினாங்கோம்பை பகுதியில், 2023 மற்றும் நடப்பாண்டில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, ஐந்து மளிகை கடைக்காரர்கள் மீது கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் கடத்துார் போலீசார், அந்த ஐந்து மளிகை கடைகளையும், நேற்று மாலை பூட்டி சீல் வைத்தனர்.
16 வயது சிறுவன் மர்மச்சாவுஅந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதுாரை சேர்ந்த பழனிசாமி மகன் கவுதம், 16; ஆப்பக்கூடல் அருகே அரசு பள்ளியில், ௧0ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் இருந்து விட்டு வீட்டுக்கு வந்த கவுதம், திடீரென வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். சிறுவனின் மர்ம சாவுக்கான காரணம் குறித்து, ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

