ADDED : மார் 02, 2024 03:10 AM
நம்பியூரில் கலெக்டர் ஆய்வு
நம்பியூர்: நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருமந்துார், கரட்டுப்பாளையம், ஆண்டிபாளையம், சுண்டக்கம்பாளையம், கூடக்கரை ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்காரா நேற்று ஆய்வு செய்தார்.
பி.கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் சிறப்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தை பார்வையிட்டார். பிறகு மோளபாளையம் அரசு மாணவர் விடுதியில் உணவு தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி இயக்குனர் நெடுஞ்சாலை துறை விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாந்தி, வரதராஜன் உடன்
சென்றனர்.
24 நாட்களில் இன்ஸ்., மாற்றம்
காங்கேயம்: காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கடந்த மாதம், 4ம் தேதி இன்ஸ்பெக்டராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேசமயம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த விவேகானந்தன், காங்கேயம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அரசியல் காரணமாக, 24 நாட்களில் சோமசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

