/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.20 கோடி சொத்தை கொடுத்தும் பராமரிக்காத மகன்;வேதனையில் 80 வயது தந்தை தீக்குளிப்பு முயற்சி

ADDED : செப் 02, 2025 01:06 AM
ஈரோடு:ஈரோட்டை அடுத்த லக்காபுரம், முத்துகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 80; இவருடைய மகன் சேகர், மகள் ரேவதி. லக்காபுரத்தில், 20 சென்ட் நிலத்துடன் வீடு, 4 ஏக்கர் விவசாய தோட்டம் சுப்பிரமணிக்கு இருந்தது.
சொத்துக்களை கடந்த, 2019ல் மகன் சேகருக்கு தான செட்டில்மென்டாக எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் மகன் தன்னை பராமரிக்கவில்லை எனக்கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த சுப்பிரமணி, தான் கொண்டு வந்த பெட்ரோலை, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுத்து, தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்.
இதுபற்றி சுப்பிரமணி கூறியதாவது:
என்னுடைய, 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தான கிரயம் செய்தும், மகன் பராமரிக்கவில்லை. மருத்துவ வசதி செய்து தரவில்லை. மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒதுக்குவதால், தற்கொலைக்கு முயன்றேன். எனது சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு கூறினார்.