/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அப்பாவை போல் கஷ்டப்பட விரும்பல'; மகன் விபரீதம்
/
'அப்பாவை போல் கஷ்டப்பட விரும்பல'; மகன் விபரீதம்
ADDED : ஜூலை 08, 2025 01:11 AM
ஈரோடு, கொடுமுடி, சென்னசமுத்திரம், சாலைப்புதுார், கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார், 35, திருமணம் ஆகாதவர். பி.இ., பட்டதாரி. கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார்.
சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் சிறுநீரக நோயால் கடந்த ஜனவரியில் இறந்து விட்டார். சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில், சுகுமார் உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இருந்த ரத்த அழுத்தம், மேலும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. இதனால் மனவேதனை அடைந்தவர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
உறவினர் ஒருவருக்கு கடந்த, 3ல் சமூக வலைதளத்தில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், 'தனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அப்பா போலவே சிறுநீரக கோளாறு இருக்கும்.
நான் எனது அப்பா போல கஷ்டப்பட விரும்பவில்லை. அதனால் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த உறவினர், சுகுமாரை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பரிசோதனையில் சல்பாஸ் மாத்திரை தின்றது தெரியவந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். சுகுமாரின் தாய் புவ னேஸ்வரி அளித்த புகாரின்படி, கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.