ADDED : ஆக 24, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி பவானி அருகே லட்சுமிநகரை சேர்ந்தவர் நாகராஜ், 33; திருமணம் ஆகாதவர். சித்தோட்டில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தாயார் சுகுணாவுடன் வசித்தார். மூன்று வாரமாக சம்பள பணம் தராததால், அதுகுறித்து சுகுணா கேட்டுள்ளார்.
இந்நிலையில் மூவேந்தர் நகரில் விஷம் குடித்த நிலையில் நாகராஜ், நேற்று முன்தினம் கிடந்தார். தகவலறிந்து சென்ற சுகுணா மகனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதனிடையே மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக, சித்தோடு போலீசில் தாய் சுகுணா புகார் அளித்துள்ளார்.