ADDED : அக் 22, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோடு டவுன் போலீசில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் நாகலட்சுமி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ப.செ.பார்க் அருகே பாதுகாப்பு பணியில் சில தினங்களுக்கு முன் ஈடுபட்டார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை கவனித்தார். உடனடியாக மணலை எடுத்து வந்து பள்ளத்தில் கொட்டி சீரமைத்தார். இதையறிந்த எஸ்.பி., சுஜாதா, நாகலட்சுமியை நேற்று அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
* வெள்ளிதிருப்பூர் மரவபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். காஞ்சிகோவில் பிரிவில் டூவீலரில்
சென்றபோது பேக் கிடந்தது. எடுத்து பார்த்தபோது லேப்டாப் இருந்தது. மதுவிலக்கு போலீசில் பணியாற்றும் தனது நண்பரான வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தார். தவறவிட்ட சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி ராம் நகரை சேர்ந்த பிரவீன், அவரை தொடர்பு கொண்டார். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் லேப்டாப் பேக்கை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அங்கு சென்றவரிடம் உரிய அடையாளங்கள், விபரங்களை கேட்டறிந்து போலீசார் ஒப்படைத்தனர். இதனால் நாகராஜ், போலீஸ்காரர் வெங்கடேஷுக்கும், எஸ்.பி., சுஜாதா அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.