/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருநங்கைகளுக்கு 24ல் சிறப்பு முகாம்
/
திருநங்கைகளுக்கு 24ல் சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 18, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு உதவிடும் வகையில், பிற துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்குதல்,
ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டையில் விடுபட்டோரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வரும், 24ம் தேதி காலை, 9:30 மணி முதல், ஈரோடு கலெக்டர் அலுவலகம், தரைத்தளம் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் அரங்கில் நடக்கவுள்ளது.