ADDED : ஜூலை 27, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்,:தமிழக
அரசு துப்புரவு பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில், துாய்மை
பணியாளர்களுக்கான சிறப்பு முகாம், அந்தியூரில் நேற்று நடந்தது.
பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்
பழனிசாமி, செயல் அலுவலர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்.
துாய்மை
பணியாளர்களின் குறைகளை தீர்க்க வருவாய், ஆதிதிராவிடர் நலம், சமூக
நலம், தாட்கோ, வேலைவாய்பு, தொழிலாளர் நலம், நகராட்சி நிர்வாகம், நீர்
வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர் பங்கேற்றனர். அரசு நலத்திட்ட
உதவிகளை விளக்கி, மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதில்
அந்தியூர், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, ஒலகடம்
பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், தங்கள்
குடும்பத்தினருடன் கலந்து
கொண்டனர்.
