/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி
/
வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி
ADDED : செப் 06, 2025 01:58 AM
ஈரோடு, :ஈரோடு அஞ்சல் கோட்டத்தில், ஈரோடு, பவானி, கோபி என மூன்று தலைமை அஞ்சலகங்கள், 61 துணை அஞ்சலகங்கள் உட்பட, 64 கணினி மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மூலம், வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்படுகிறது.
அஞ்சல் அலுவலகம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல் நிலவரத்தை ஆன்லைனில் அறியலாம். அஞ்சல் துறை மூலம் குறைந்த செலவில், பாதுகாப்பாக, விரைவாக பார்சல்கள் சென்றடைவதால், அஞ்சலகத்தை நாடலாம். உலகில், 106 நாடுகளுக்கு விரைவு தபால் சேவை, 200 நாடுகளுக்கு வான்வழி பார்சல் சேவை, 46 நாடுகளுக்கு ஐ.டி.பி.எஸ்., எனப்படும் சேவைகளும் அஞ்சல் துறை வழங்குகிறது. ஈரோடு தலைமை அலுவலகத்ததில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும்போது, பேக்கிங் ஏற்பாடு செய்து தரப்படும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சிறிய, பெரிய வணிக நிறுவனங்களுக்கு எளிய வகையில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப ஏதுவாக, டி.என்.கே., வசதியும் உள்ளது. இத்தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளார்.