/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : டிச 25, 2025 04:52 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலை-மையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.
கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், அடுக்கு மாடி குடியிருப்பு, மாதாந்திர உதவித்தொகை என, 30 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசார-ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட செயலாக்க குழுக்கூட்டம் நடந்தது. இத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, நலவா-ரிய பயன்கள், உதவி உபகரணங்கள், இணைப்பு சக்கரம் பொருத்-தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. வரைவு வாக்-காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கப்பட்டது.டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தனித்துறை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

