/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விசேஷ பூஜை
/
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விசேஷ பூஜை
ADDED : ஜன 16, 2024 10:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, தில்லை நகர், சீரங்க வீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தை மாத பண்டிகை கடந்த, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைப்பு நடந்தது.
இதையடுத்து சவுடேஸ்வரி அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. சிறுமியர் மற்றும் வயதான பெண்கள், ஆண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
மாலையில் ராகு தீப ஜோதி மெரவணை நடந்தது. இன்று மதியம் அம்மனுக்கு மஹா அபிேஷகம், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.