/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இணைய தொழிலாளருக்கு நலவாரிய சிறப்பு முகாம்
/
இணைய தொழிலாளருக்கு நலவாரிய சிறப்பு முகாம்
ADDED : அக் 08, 2024 03:52 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரி-யத்தில், இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர் (ஆன்லைன் இயங்குதள தொழிலாளர்) உறுப்பினராக சேர சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது-காப்பு திட்டம்) முருகேசன், விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 'கிக்' தொழிலாளர், www.tnuwwb.in என்ற இணையதளத்தில் விண்-ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். ஈரோடு, சென்னி-மலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று காலையில் முகாம் நடக்கிறது. நலத்திட்டம் குறித்த விபரத்தை, உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2275591, 92 என்ற எண்களிலும், lossserode@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.