/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் அ.தி.மு.க., சார்பில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ADDED : ஆக 16, 2025 01:43 AM
பெருந்துறை, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் வெற்றி அடையவும், 2026ல், அவர் மீண்டும் முதல்வராக வேண்டியும், பெருந்துறை ஒன்றியம் சார்பில், பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் வழங்கும் விழா நடைபெற்றது.
பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பணன் சிறப்பாளராக கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு கூழ்
வழங்கினார்.
அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணி செயலர் அருணாச்சலம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலர் ராம்ஸ், நகர செயலர்கள் பெருந்துறை கல்யாணசுந்தரம், நல்லாம்பட்டி துரைசாமி, கருமாண்டி செல்லி
பாளையம் பழனிசாமி, காஞ்சிகோயில் சிவசுப்பிர
மணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.