ADDED : ஜன 02, 2026 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: ஆங்கில புத்தாண்டு பிறப்பு தினமான நேற்று, தாராபுரம் தாசில்தார் அலுவலக ரோட்டில் உள்ள, புனித ஞானப்பிரகாசி-ரியர் ஆலயத்தில், நள்ளிரவில் நன்றியறிதல் ஆராதனை, கூட்டு பிரார்த்தனை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணியளவில், பங்குத்தந்தை ஜார்ஜ் தன-சேகர் தலைமையில், சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்திலும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி சிறப்பு பிரார்த்-தனை நடந்தது. இதிலும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

