/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
ADDED : ஜூலை 10, 2024 02:52 AM
ஈரோடு:தமிழ்
வளர்ச்சி துறை சார்பில் 'தமிழ்நாடு நாள்' கொண்டாடுதல் தொடர்பாக,
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டி
ஈரோட்டில் நேற்று நடந்தது.
மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர்
நாகராசன் தலைமை வகித்தார். அலுவலர்கள் மகேஸ்வரி, இந்திரா, பிரபாகரன்
முன்னிலை வகித்தனர். இதில், 74 பள்ளிகளை சேர்ந்த, 133 மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.
கட்டுரை போட்டியில் கொடுமுடி
எஸ்.எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி வீரமணிகண்டன், துடுப்பதி அரசு
மேல்நிலைப்பள்ளி ரம்யா, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஸ்ரீஜா
ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
பேச்சு போட்டியில் உத்தண்டியூர்
அரசு உயர்நிலைப்பள்ளி கோல்குபிரசாத், ஓடத்துறை சோமசுந்தரம்
நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி அவிஷ்னா, கவுந்தப்பாடி அரசு
மேல்நிலைப்பள்ளி பிரணிதா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
முதல்,
3 பரிசாக தலா, 10,000, 7,000, 5,000 ரூபாய் தனித்தனியாக
வழங்கப்படுகிறது. இப்பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் கலெக்டர்
தலைமையில் நடக்கும் அரசு விழாவில் வழங்கப்படும்.
கட்டுரை, பேச்சு
போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் வரும், 16ம் தேதி சென்னையில்
நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க
பரிந்துரைக்கப்படுவர்.