/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி
ADDED : ஜூலை 10, 2025 01:22 AM
ஈரோடு,  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது.
கட்டுரை போட்டிக்கு நடுவர்களாக ஆசிரியர்கள் நாகராஜ், வாசுகி, கணேசன் ஆகியோர் செயல்பட்டனர். வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ரூபிக்ஷா, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி ரம்யா, நம்பியூர் குமுதா பதின்ம மேல்நிலைப்பள்ளி மஹன்யா ஆகியோர் முதல், 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
அடுத்து நடந்த பேச்சு போட்டிக்கு நடுவர்களாக ஆசிரியர்கள் கந்தசாமி, பூங்கொடி, இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் செயல்பட்டனர். வலையபாளையம் ஸ்ரீமித்ரா, அந்தியூர் அரசு மகளிர் மேல்
நிலைப்பள்ளி நிவேதாஸ்ரீ, ஈரோடு கேட்டு
புதுார் ஆர்.டி.பன்னாட்டு பள்ளி தியா ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர்.