ADDED : ஆக 29, 2025 01:13 AM
ஈரோடு :தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு செப்.,9 மற்றும் 10ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கவுள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கான போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு, 'எழுத்தாளராக அண்ணா, தமிழும் அண்ணாவும், அண்ணாவும் பெரியாரும்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'அண்ணாவும் மேடைப்பேச்சும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்ற தலைப்பில் போட்டிகள் நடக்க உள்ளது.
ஈ.வெ.ரா., குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, 'வெண்தாடி வேந்தர், தன்மானப் பேரொளி, பெரியாரின் சமூக சிந்தனைகள்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'தெற்காசியாவின் சாக்ரடீஸ், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள், சுயமரியாதை இயக்கம்' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடக்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசாக தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் சிறப்பாக தேர்வு செய்யப்படும் இருவருக்கு, சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்.